WHAT WE DO

BJ Photography தன்னுடைய முயற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வலுவான எதிர் காலத்தைக் கட்டியெழுப்பும் முகமாக மட்டுமல்லாது முதியோர்களுக்கும் கூட வாழ்வாதார உதவிகள் மற்றும்,மருத்துவ உதவிகளுக்கான பண வசதிகளையும் நேரடியாக மக்களிடம் செய்து வருகின்றனர்.

"இன்று நாம் விதைப்பது நாளை மர நிழல் ஆகி நமக்கே உதவும்."

வாதரவத்தை கிராமத்தில் வசித்து வந்த திரு.கிருஸ்ணபிள்ளை வீரசிங்கம் அவர்கள் தன்னுடைய சொந்த கிராமத்தில் வசிப்போருக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார் . இன்றும் அவருடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் நல்ல மனத்தோடு வழி நடத்தி வருகின்றனர்.

HISTROY

1961
கிருஸ்ணபிள்ளை வீரசிங்கம்

கிருஸ்ணபிள்ளை வீரசிங்கம் அவர்கள் வாதரவத்தை என்னும் கிராமத்தின் முக்கிய நபர்களின் ஒருவராக விளங்கினார். இவர் கிராமத்தின் வளர்ச்சிக்காகவும் ,சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினராகவும் கிராமத்தின் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியவர்.சமயப்பற்று அதிகம் கொண்ட இவர் தங்கள் குல தெய்வமான வாதரவத்தை நரசிங்கர்ஆலயத்தினை தம்முடைய சொந்த முயற்சியின் காரணமாக நல்ல முறையில் நிர்வகித்து வந்தார்.ஆலயத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார் .வாதரவத்தை கேதுவூர் ஆலயத்தின் திருவிழா நிர்வாக சபையில் இருந்து பல திருவிழாக்களை திறம்பட செய்து முடித்தார் .இவரே இவ் ஆலயத்தின் திருவிழாவின் போது முதன் முதலில் சிகர அலங்காரத்தினை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் அரச ஒப்பந்தகார்ரராக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தன்னுடைய தொழிலை மேற்கொண்டார் . இவர் தான் வேலை செய்த இடங்களிலும் தன்னுடைய மேலதிகாரிகளின் அன்பையும் ,நன் மதிப்பையும் பெற்றவர். வேலைத்திறன் காரணமாக பல் வேறு வேலைகள் வந்து குவிந்தன.எனினும் தான் மேற்கொண்ட பணிகளை திறம்பட செய்த இவர் தனக்கு பொருத்தமான வேலைகளையே மேற்கொண்டார்.இவர் வேலை செய்த காலப்பகுதியில் வாதரவத்தையைச் சேர்ந்த பலருக்கு வேலை வாய்ப்பளித்து அக்குடும்பங்களின் மேம்பாட்டுக்கு உதவி புரிந்தார் .

1981
மல்லிகாமலர் யோகராஜா

கிருஸ்ணபிள்ளை வீரசிங்கத்தின் மூத்த மகளாகிய மல்லிகாமலர் யோகராஜா ஜேர்மனியில் வசித்து வருகிறார் .இவர் தான் பிறந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற அவாவினைக் கொண்டவர்.வாதரவத்தை என்னும் தான் பிறந்த கிராமத்தில் இளைஞர்களால் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நிலா விளையாட்டுக்கழகத்துக்கு சீருடையினை அன்பளிப்பாக வழங்கினார் .விளையாட்டுக்கழகங்களுக்கு மட்டுமல்லாது வாதரவத்தை விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கும் தன்னாலான உதவியினை செய்து வருகிறார் . எடுத்துக்காட்டாக இரண்டாயிரத்து பதின்மூன்றாம் (2013) ஆண்டில் இடம் பெற்ற பரிசில் விழாவிற்காக இருபத்தையாயிரம் (25000)ரூபாவினையும் ,பாடசாலை முற்றத்தில் உள்ள சிலைக்கு நூறு(100)யூரோவையும் அன்பளிப்பாக வழங்கினார் .என்பதும் குறிப்பிடத்தக்கது அக்கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்தோருக்கும் பண உதவியினை தொன்று தொட்டு செய்து வருகிறார் எனவும் குறிப்பிடத்தக்கது .மருத்துவ வசதியினை செய்ய முடியாதிருக்கும் நோயாளிகளுக்கும் தன்னாலான உதவியினை செய்து வருகிறார் என்பதும் மிகவும் சந்தோசத்துடன் குறிப்பிடத்தக்க சான்றுகளாகும் .

2014
திஷா அஜந்தன்

BJ PHOTOGRAPHY மற்றும் ADS TECNOLOGY நிர்வாகியான த.அஜந்தன் அவர்கள் மக்களுக்கு நேரடி உதவிகளை வழங்கவே BJ Helpers ஐ வாதரவத்தை எனும் கிராமத்தில் இதனை செய்ய விரும்புகின்றனர். வீரசிங்கம் ஐயா அவர்களுடைய வாரிசுகளும் வழி நடத்தி வரும் வாதரவத்தை நரசிங்க வைரவர் ஆலயத்தினூடாக அன்னதானம் மற்றும் ஏனைய உதவிகளையும் செய்து வருகின்றனர்.

TEAM

Jennifer Oliver

Manager

John Santos

Ass Manager

Nancy Little

Ass Manager

THANK YOU

Mr. senthilkumaran

for the help to the hindu board of education. 16.600rupee.

Mr. ajanthan

Our Help for the Visually Handicapped.5000Rupee.

Mr. palendra

for the Visually Handicapped.5000Rupee.

All Videos